11 வருடங்களாக பேர்மிங்கம் பகுதியில் இயங்கிவரும் மிட்லாண்ட நுண்கலை தமிழ் மன்றம் தாய்மொழியாம் தமிழை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவும், தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அவர்கள் அறிந்து கொள்ளவும் மற்றும் நமது கலைகளை அறிந்து கொள்ளவும் உருவாக்கப்பட்டது .ஆரம்பத்தில் ஐந்து மாணவர்களுடன் ஆரம்பித்த இந்த பாடசாலையில் தற்போது 185 மாணவர்கள் கல்வி பயிற்றுவருகிறார்கள்.இந்த 11 வருட பாடசாலை வளர்ச்சியில் மாணவர்கள் கல்வி கற்பதற்காக பல இடங்களை மாற்றி வந்தோம்.இனியும் இவ்வளது தொகை மாணவர்களுடன் எம்மால் இட மாற்றம் செய்ய முடியாத நிலையில் இந்த தமிழ் மன்றத்திற்கு ஒரு நிரந்தர இடம் தேவை என்ற முடிவிற்கு மன்ற நிர்வாகம் வந்துள்ளது . அத்துடன் இப்பகுதியில் தமிழ் மக்களுக்கு ஒரு சந்திப்பு இடமாகவும் இது செயல்படும். அதற்காகவே பல வழிகளில் கட்டிடம் வாங்க பணம் சேர்க்க திட்டமிட்டுள்ளோம் . இந்த நல்ல நோக்கத்திற்காக உங்கரங்கள் மூலம் உதவியை எதிர்பார்க்கின்றோம். நன்றி
MFALA நிர்வாம்.
தானங்களில் சிறந்த தானம்
கல்வி தானம்.